தெலங்கானா பாலியல் கொலை விவகாரம்.. மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு

  முத்து   | Last Modified : 24 Dec, 2019 01:38 pm
telangana-encounter-high-court-orders-repostmortem

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் கடந்த மாதம் 27ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அடுத்த இரண்டு நாட்களில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லும்போது தப்பியோட முயன்றதாக 4 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையில், இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சார்பில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் என்கவுண்டர் செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை பதப்படுத்திவைக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது. 

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, என்கவுண்டர் செய்யப்பட்டு ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளின் உடல்களை மறு உடல் கூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close