ட்விட்டரில் புத்தாண்டு பரிசு கேட்ட இளைஞர்! உடனடியாக ஆச்சர்யப்படுத்திய பிரதமர் மோடி!

  சாரா   | Last Modified : 03 Jan, 2020 04:53 pm
modi-s-newyear-gift

நாடு முழுவதும் நேற்று புத்தாண்டை கோலாகலமாக மக்கள் கொண்டாடி மகிழ்ந்த நேரத்தில், புத்தாண்டு பரிசாக தன் ட்விட்டர் கணக்கை பின் தொடர வேண்டுமென கேட்ட இளைஞரின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்ந்து அவரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார் பிரதமர் மோடி!

2009-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் தனது கணக்கைத் தொடங்கினார். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியின் ட்விட்டர் கணக்கை 52 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இதன்மூலம் 111.6 மில்லியன் லட்சம் பேர் பின்தொடரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் 67.4 மில்லியன் பேர் பின்தொடரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு அடுத்தப்படியாக ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் பட்டியலில் மோடி 3வது இடத்தை மீண்டும் பெற்றுள்ளார். 

தற்போது இந்திய பிரதமர் மோடி, 2381 பேரின் ட்விட்டர் கணக்குகளை ஃபாலோ செய்து வருகிறார். முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்களை ஃபாலோ செய்யும் பிரதமர் மோடி சில சாமானியர்களையும் ஃபாலோ செய்கிறார். அதன்படி நேற்று பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட் செய்த அங்கிட் துபே என்ற இளைஞர், மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, நான் உங்கள் தீவிர ரசிகர். புத்தாண்டு பரிசாக நான் ஒன்று கேட்பேன். அதை தருவீர்களா? நீங்கள் என் ட்விட்டர் கணக்கை தயவு செய்து பின் தொடர வேண்டும் என பதிவிட்டார். 

அந்த இளைஞரின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த பிரதமர் மோடி, செய்து விட்டேன். சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பதிலால் மகிழ்ச்சியடைந்த அங்கிட், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் மோடி ட்விட்டரில் என்னை பின் தொடர்வது இந்த புத்தாண்டின் சிறந்த பரிசு. பிரதமர் மோடிக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் கணக்கை பின் தொடர்ந்ததை புகைப்படமாக எடுத்த அங்கிட், தனது டுவிட்டர் கணக்கில் அந்த புகைப்படத்தை முகப்பு படமாக மாற்றி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close