ரகசிய சந்திப்பு.. காதல் ஜோடியை கட்டிவைத்து தாக்கிய கிராம மக்கள்..

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 03:40 pm
village-people-attack-at-lovers

பீகாரின் சுபால் மாவட்டத்தில் ஒரு இளம் தம்பதியினர் ஒருவரையொருவர்  காதலித்ததற்காக, தலிபான் தீவிரவாதிகள் பாணியில் பகிரங்கமாக அவமதிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டனர். தனது காதலனை ரகசியமாக சந்தித்த பெண்ணை  கிராமவாசிகள் பிடித்தபோது இந்த  செய்தி வெளிச்சத்திற்கு வந்தது.  அந்தப் பெண் தனது காதலரான பிரமோத் மண்டலை ரகசியமாக சந்திக்க அழைத்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். கிராமவாசிகள் இருவரையும் கையும்களவுமாக பிடித்து, பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டனர், அங்கிருந்தவர்கள் அவர்களை கரும்பு கட்டையால் இரக்கமின்றி அடித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது .இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட சர்பஞ்ச், சம்பனகர் கிராமத்தில் வசிக்கும் மகேந்திர சர்தார் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close