ஆதாரால் மாட்டிய 80 ஆயிரம் பேராசிரியர்கள்

  Anish Anto   | Last Modified : 06 Jan, 2018 07:45 am


ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முறைகேடாக முழுநேர பேராசிரியராக பணியாற்றி வந்த 80 ஆயிரம் பேர் ஆதார் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர். 

சமீபத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் ஆதார் விபரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பணி புரிந்த பேராசிரியர்களின் ஆதார் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட விபரங்கள் பின்னர் உயர் கல்வித்துறையால் ஆய்வு செய்யப்பட்டு 2016-17-ம் கல்வி ஆண்டிற்கான அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேர பேராசிரியராக முறைகேடாக பணியாற்றி வந்த 80 ஆயிரம் பேர் ஆதார் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மத்திய பல்கலைக்கழங்களை சேர்ந்த பேராசிரியர்கள் யாரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close