ஆதார் கார்டுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைக்க மத்திய அரசு உத்தரவு

  Sujatha   | Last Modified : 08 Feb, 2018 10:10 am


ஆதார் கார்டுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு, வங்கிக் கணக்கு, பான் எண், கேஸ் மானியம், உரம் மானியம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆதார் எண்ணுடன் இணைப்பதை கட்டாயப்படுத்தியது. மேலும் மத்திய அரசின் 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க அரசு கட்டாயமாக்கியது. இந்நிலையில் மத்திய அரசு டிரைவிங் லைசென்ஸ்டன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு இணைப்பதன் மூலம் போலி உரிமங்கள் உபயோகப்படுத்துவது முழுவதுமாக நிறுத்தப்படும். போலி வாகன ஓட்டுநர் உரிமம் மூலம் வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளாகும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசு இந்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close