கோடை விடுமுறைக்கு ட்ரெக்கிங் போகலாம் வாங்க!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Mar, 2018 05:07 pm


கேரள மாநிலம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலையேற்றம் 18 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்காக இன்று முதல் மீண்டும் துவங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த விபத்தில், சிக்கி சுமார் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் செல்ல தாற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.


தீக்கு இரையான இந்த இளம் உயிர்களின் இறப்பு தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து கேரள வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அதிகாரிகள், கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளிலும் மலையேறும் பயிற்சிக்கு தாற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 12 ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டிருந்த ட்ரெக்கிங் தற்போது 18 நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் ட்ரெக்கிங் எனும் மலையேறும் பயிற்சி, ஜங்கிள் கேம்ப் எனும் வனத்திற்குள் முகாம் அமைத்தல், டைகர் ட்ரையல், பாம்பூ ராஃப்டிங், புக் மார்க் ட்ரையல் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு பொழுதுபோக்கு திட்டங்கள் அனைத்தும் துவங்கப்பட்டது. கேரளாவில் தற்போது சில்லென்று மழை வருவதால் இந்த திட்டங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள், ரூ. 2,500க்கு வனத்திற்குள் மலையேறும் பயிற்சி, ரூ.4000க்கு வனத்திற்குள் இரவு முகாமிட்டு தங்கி வரும் வசதி எனத்துவங்கி 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வரை சுற்றுலா பயணிகளுக்கான திட்டங்கள் உள்ளன.

தேக்கடி வனத்திற்குள் மலையேறும் பயிற்சி மற்றும் வனத்திற்குள்ளான முகாம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் மூலம் செல்லும் ஏழு பேர் கொண்ட குழுவிற்கு, புலிகள் காப்பக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர், ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களில் இருவர், இரு வனத்துறை பணியாளர் என ஐந்து பேர் வழிகாட்டியாகவும், பாதுகாப்பிற்காகவும் செல்வது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close