• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு; சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட 5 பேர் விடுதலை

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2018 05:50 pm


2007ம் ஆண்டு நடைபெற்ற ஹைதராபாத் மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவத்தில், தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ) குற்றம்சாட்டிய 5 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில், கடந்த 2007ம் ஆண்டு மே மாதம், பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களில், 5 பேர் உயிரிழந்தனர். 

இதுகுறித்து ஹைதராபாத் போலீசார் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்புடையதாக கருதப்பட்டது. சுமார் 200 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் ஹர்கத்-உல்-ஜிஹாத் -ஈ-இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த பிலால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். இந்நிலையில், போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார். 

இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளிகள் அத்தனை பேரும் 2009ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். அதன் பின், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 

சிபிஐ விசாரணையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய வலதுசாரி அமைப்பை சேர்ந்த சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டது. 2011ம் ஆண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வுத்துறை கையில் எடுத்தது. சுவாமி அசீமானத் உள்ளிட்டோர் மீது விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. 

குற்றம் சட்டப்பட்டவர்களில், சுவாமி அசீமானந்த், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, பாரத் மோகன்லால் ரதேஸ்வர், ராஜேந்திர சவுத்ரி ஆகிய 5 பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இதில் அசீமானத் மற்றும் ரதேஸ்வர் ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர். இன்று இந்த வழக்கில் தேசிய புலனாய்வுத் துறையின் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 

தீர்ப்பின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. என்.ஐ.ஏ அல்லது இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மேல்முறையீடு செய்யலாம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close