இந்துக்களுக்கு எதிரான காங்கிரஸின் முகத்திரை கிழிந்துவிட்டது: பா.ஜ.க

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2018 08:52 pm


ஹைதராபாத் மெக்கா குண்டு வெடிப்பு சம்பவத்தில், சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேர் விடுவிக்கப்பட்ட பின், இந்துக்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் முகத்திரை கிழிந்துவிட்டதாக பா.ஜ குற்றம் சாட்டியுள்ளது.

2007ம் ஆண்டு ஹைதராபாத் மசூதியில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில், இன்று தேசிய புலனாய்வுத்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்த், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர் உள்ளிட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 

இதுகுறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, "இன்று காங்கிரஸ் கட்சியின் முகத்திரை கிழிந்துவிட்டது. இந்து தீவிரவாதம் என்ற பெயரில், இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வந்த காங்கிரஸ் கட்சியின் குட்டு வெளிப்பட்டுள்ளது. இந்துக்களை இழிவுபடுத்தியதற்காக ராகுல் காந்தி இன்று இரவு மெழுகுவர்த்தி ஏந்தி நிற்பாரா" என கடுமையாக சாடினார். 

காங்கிரஸ் கட்சியோ, பிரதமர் மோடியின் கீழ் தேசிய புலனாய்வுத்துறை சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. "பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின், இதுபோன்ற பல வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது" என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close