ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி திடீர் ராஜினாமா

  Padmapriya   | Last Modified : 17 Apr, 2018 04:41 pm

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேரை விடுவிப்பதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்திர ரெட்டி, மாலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் உள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007, மே 18-ஆம் தேதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர், 58 பேர் படுகாயமடைந்தனர். மேலும், மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் சுவாமி அசீமானந்தா, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு ஹைதராபாத்திலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (திங்கட்கிழமை) காலை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் 3 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர். எஞ்சியுள்ள சுவாமி அசிமானந்தா, தேவேந்தர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத் பாய் மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ரவீந்திர ரெட்டி நீதிபதி பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று மாலையே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, ரவீந்திர ரெட்டி ஹைதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தனது சொந்த காரணத்துக்காக பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close