100 கோடி சொத்துக்களை உதறி, துறவறம் பூண்ட சிஏ பட்டதாரி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Apr, 2018 04:48 pm


குஜராத்தில் படித்த இளைஞர் ஒருவர் திடீரென துறவறம் பூண்டது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த சிஏ படித்த இளைஞர் ஜெயின் சமுதாய மரபுப்படி நேற்று துறவறம் பூண்டுள்ளார். 24 வயதுடைய மோஷேஷ் ஷேத் என்ற இளைஞரின் தந்தை வைர வியாபாரம், சர்க்கரை ஆலைகள், இரும்பு ஆலைகள் என ஏராளமான நிறுவனங்களுக்கு சொந்தகாரர். அவரின் ஒரே வாரிசு மோஷேஷ் தான். பணத்திலே புரண்டதாலோ என்னவோ அவருக்கு பணம், சொத்து மீதுள்ள பிரியம் குறையதொடங்கியுள்ளது. பட்டதாரி இளைஞரான மோஷேஷ், தனக்கு ஒரு மதத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே நீண்ட நாள் ஆசை எனக்கூறுகிறார். இதனை ஏற்றுக்கொண்ட அவர்களது பெற்றோர்கள் மோஷேஷ் துறவற எடுத்த முடிவுக்கு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அகமதாபாத்தில் ஜெயின் மத குருக்கள் முன்னிலையில் அவர் துறவறம் பூண்டார். பலகோடி சொத்துகளில் புரண்ட இவர் இனி குடும்பத்தை துறந்து துறவிகளுடன் தன் வாழ்க்கையை கழிப்பார் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது 

முன்னதாக சில தினங்களுக்கு முன், குஜராத்தில் கோடீஸ்வர வைர வியாபாரியின் 12 வயது மகன் துறவறம் பூண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close