'என் விதி முதல்வர் யோகி கையில்': 60 குழந்தைகள் இறந்த மருத்துவமனை டாக்டர்

  Newstm Desk   | Last Modified : 01 May, 2018 03:23 am


உத்தரபிரதேச மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தில் கைதான மருத்துவர் கஃபீல் கான், சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டார். தற்போது அவர், தனது வருங்காலம், முதல்வர் யோகி எடுக்கும் முடிவிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபாராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. முதலில் குழந்தைகள் மூளைவீக்கத்தால் இறந்தாக அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் பின்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்தான் குழந்தைகள் இறந்தன என சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.  


குழந்தைகளை காப்பாற்ற போராடி, தன் சொந்த பணத்தை வைத்து ஆக்சிஜன் வாங்க போராடிய டாக்டர் கஃபீல் கான் கைதானார். 8 மாதங்களுக்கு பின்னர் அவர் சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல என உ.பி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

முன்னதாக கோரக்பூர் மருத்துவமனையில் நடந்தது என்ன என்பதை கான் கடிதமாக எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “பாபாராகவ் தாஸ் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்த புஷ்பாகேஸ் நிறுவனத்துக்கு ரூ.68 லட்சம் பாக்கி வைத்துள்ளதால் கேஸ் சப்ளையை நிறுத்தியது. இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு பலமுறை எச்சரித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் என்னுடைய சொந்த பணத்தில் தற்காலிகமாக கேஸ் ஏற்பாடு செய்து மருத்துவமனையில் பயன்படுத்தி வந்தேன்.


ஆக்சிஜன் காரணமாக குழந்தைகள் இறந்ததாக செய்தி வெளியானவுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அரசை அவமானப்படுதியதாக கடும் கோபத்தில் இருந்ததாக என்னிடம் சிலர் கூறினார்கள். அதனால் இந்த விஷயம் குறித்து நான் வெளியே எதுவும் பேசவில்லை" என்றிருந்தார்.

தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அவர், இனி என்ன செய்யப்போகிறார் என கேட்டதற்கு, "எனது விதி முதல்வர் யோகியின் கையில் உள்ளது. அவர், என் வேலையே திருப்பிக் கொடுத்தால், நான் மீண்டும் பணிக்கு திரும்புவேன்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close