16 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்த வழக்கு; 14 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 05 May, 2018 03:55 pm


ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, வன்கொடுமை செய்து, பின்னர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன், சத்ரா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பெண், தனது உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை மறித்து, காட்டுக்குள் அழைத்து சென்று சிலர் சேர்ந்து வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதில், குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.50,000 வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பை கேட்டவுடன் ஆத்திரத்தில் அங்கிருந்தவர்களுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோபத்தில் அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று, தீ வைத்தனர். வீட்டுக்குள் இருந்த அந்த சிறுமி உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் இன்று ஜார்கண்ட் போலீசார் 14 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும்,  4 பேரை தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், "ஒரு நல்ல சமூகத்தில் இதுபோன்ற கோர செயல்களுக்கு இடமில்லை" என கூறினார்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close