தூக்கிட்டு வந்து பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வையுங்கள் - எடியூரப்பா பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 05 May, 2018 11:41 pm


சட்டமன்ற தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்யாமல் இருக்கும் வாக்காளர்களின் கை, கால்களை கட்டி வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வையுங்கள் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தல் வருகிற 12ம் தேதி நடைபெறுவதையொட்டி, அம்மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை காப்பாற்ற காங்கிரசும் கைப்பற்ற பா.ஜ.க-வும் பலமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளன. 

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்றுவிடுவார். பா.ஜ.க தான் வெற்றிப்பெறும். காங்கிரஸ் மூழ்கி கொண்டிருக்கும் கப்பல். எனவே அனைவரும் பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள். பா.ஜ.க-வை வெற்றிப்பெற வைக்கை பாஜக தொண்டர்கள் ஓட்டுப்போடாமல் வீட்டிலிருக்கும் வாக்காளர்களின் கை, கால்களை கட்டி வாக்குச்சாவடிக்கு தூக்கி வந்து பாஜகவுக்கு ஓட்டுப்போட வைக்க வேண்டும்" என கூறினார். 

வாக்காளர்களை கடத்தி வரச் சொல்லும் எடியூரப்பாவின் பேச்சு கர்நாடகாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழரான நிர்மலா சீதாராமனை கன்னடர் என்று கூறியது, ஃபீல்டு மார்ஷல் பற்றிய பேச்சுக்களால் கர்நாடக பா.ஜ.க-வின் மீதான மதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், மேலும் மேலும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைச் சொல்வது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க தொண்டர்கள் புலம்புகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close