நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 09:21 am

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் இன்று 136 நகரங்களில் நடைபெறுகிறது. 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வ 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு 1,07,288 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மொத்தம் 136 நகரங்களில் 255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 170 தேர்வு கூடங்களில் 7 ஆயிரத்தி 288 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

மேலும் ராஜஸ்தான், புனேவிலும் தமிழக மாணவர்களுக்கு நீட் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பி பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 8.30 மணிக்கும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஹால் டிக்கெட் காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவா்கள் 9.30 மணிக்கு மேல் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தோ்வு நடைபெறும். 

இந்நிலலையில் மையங்களில் மாணவர்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பிறகே மாணவர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.  

பிளஸ் 1, பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்வி கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 720 மதிப்பெண். ஒவ்வொரு கேள்விக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரி யான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். தெரியாத கேள்விக்கு விடை அளிக்காமல் விட்டுவிட்டால் மதிப்பெண் குறைக்கப்படாது. 

தே்ாவு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close