வேகமாக வளரும் பொருளாதார நாடு: இந்தியாவுக்கு முதலிடம் வழங்கிய ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Last Modified : 06 May, 2018 03:57 pm

அடுத்த பத்தாண்டுகளுக்கு உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

இதில் இந்தியாவின் முன்னேற்றம் ஆண்டுக்கு 7.9 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச மேம்பாட்டு மையம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 

வேதிப்பொருட்கள், வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்தியதன் மூலம் ஆண்டுக்கு 7.9 சதவீதம் என்ற அளவில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் அதில் குறிப்பிட்டதாவது, "இந்தியாவின் தற்போதைய வருவாய் உடன் ஒப்பிடும்போது அதனுடைய உற்பத்தித் திறன் எதிர்பார்ப்பைவிட அதிகமாக உள்ளது. இதனால் வரும் காலத்தில் மிக வேகமான வளர்ச்சி இருக்கும். சிக்கல் நிறைந்த பொருட்களை உள்ளடக்கிய துறையில் நுழைவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. புதிதாக வளரும் துறைகளில் பரவலாக நுழையும் யுக்தியை இந்தியா அறிந்துகொண்டால் அதன் வளர்ச்சி நீண்ட கால அளவில் நிலையாக இருக்கும்.

சீனா, ஆண்டுக்கு 4.9 சதவீதம் என்ற அளவிலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆண்டுக்கு 3.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும். இந்த நாடுகளை விட மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் உகாண்டாவும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியுள்ளது.  இரண்டாவது இடத்தில் இருக்கும் உகாண்டா, ஆண்டுக்கு 7.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும்" என கூறப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close