திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழலாம் - உச்சநீதிமன்றம் பலே தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 03:58 pm


ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதில் எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த நந்தகுமார் (21) என்ற இளைஞர், துசாரா (18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மைனர் என்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என துசாராவின் தந்தை கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களது திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் நந்தகுமார்- துசாரா சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் மீண்டும் துசாராவின் தந்தை நந்த குமாரிடமிருந்து தனது மகளை பிரித்து தரும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வது குற்றமில்லை. பெண் 18 வயது நிரம்பி விட்டாலே அவள் ஒரு ஆணோடு திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழலாம். இது ஒன்றும் குற்றமில்லை என தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பு காதலர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அதே நேரத்தில், பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close