பாம்பு கடித்த பெண்ணை சாணத்தில் புதைத்த வைத்தியர்! மூச்சுத் திணறி இறந்த பரிதாபம்

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 07:08 pm


பாம்பு கடித்த பெண்ணிற்கு, வைத்தியர் ஒருவர் சாணத்தால் மூடி சிகிச்சை அளித்ததில் அந்த பெண் உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சஹரை சேந்தவர் தேவேந்திரி (35). காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற போது அவரை பாம்பு கடித்தது. அவருடன் காட்டுக்குச் சென்ற பெண்கள் அவரை காப்பாற்றி கிராமத்துக்கு தூக்கி வந்தனர். உடனே அவரது கணவர் முகேஷ்க்கு அங்கிருந்த பெண்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, முகேஷ் கிராமத்து வைத்தியரை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.


தேவேந்திரியை சோதித்த மருத்துவர் அவர் உடலில் விஷம் ஏறிவிட்டது. உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என கூறியுள்ளார். உடனே வைத்தியர் வீட்டின் தொழுவத்துக்கு அப்பெண்ணை அழைத்துச்சென்றார். தேவேந்திரியை படுக்க வைத்து அவர் உடல் முழுவதும் சாணம் பூசினார். பாம்பு கடித்த பெண் உடலில் இருந்து விஷம் நீங்க மாட்டுச்சாணத்தில் புதைக்கப்பட்டார். 75 நிமிடங்களுக்குப் பிறகு பார்த்தபோது தேவேந்திரி இறந்து கிடந்தார். சாணத்தில் மூடினால் விஷம் இறங்கிவிடும் என்ற மூட நம்பிக்கையால் தேவேந்திரி மூச்சுத்திணறி இறந்தார். தேவேந்திரிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனராம். மூட நம்பிக்கையால் இன்று இந்த ஐந்து குழந்தைகளும் தாயை இழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசுக்கு தெரிவிக்கவில்லை. உடனடியாக தேவேந்திரிக்கு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் கேட்டபோது, எங்களுக்கு தகவலே தெரியாது. யாரும் புகாரும் செய்யவில்லை. இதனால், நாங்களும் விசாரணை, வழக்கு என்று எதையும் மேற்கொள்ளவில்லை என்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close