பெண் குழந்தைகளை தத்தெடுப்பதில் மகாராஷ்டிரா முதலிடம்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 12:29 pm


இந்தியாவில் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், அதில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தியாவில் எவ்வளவு குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர் என தனிநபர் ஒருவர் குழந்தைகள் தத்தெடுப்பு ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஆணையம் பதிலளித்ததில், "மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தற்போது அதிகமான குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2017-18ம் ஆண்டுகளில் 3,276 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 1,858 குழந்தைகள் பெண் குழந்தைகள். 

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் குழந்தைகளை தத்தெடுப்பதில் முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் தத்தெடுக்கப்பட்ட 642 குழந்தைகளில் 353 குழந்தைகள் பெண் குழந்தைகள் ஆவர். இரண்டாமிடத்தில் உள்ள கர்நாடகாவில் தத்தெடுக்கப்பட்ட 286 குழந்தைகளில் 167 பேர் பெண் குழந்தைகள். 

மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடம் பெறுவதற்கு அங்குள்ள தத்தெடுப்பு மையங்களின் எண்ணிக்கையே காரணம். மற்ற மாநிலங்களில் 20 மையங்கள் இருக்கின்ற நிலையில், மகாராஷ்டிராவில் 60 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

கடந்த 5 வருடங்களில் 59.77% தம்பதியர் பெண் குழந்தைகளையும், 40.23% தம்பதிகள் ஆண் குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளனர். பெண் குழந்தைகளை பராமரிக்க மிகவும் எளிதாக இருப்பதால் அவர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவதாக காரணம் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close