உ.பி பெண் எம்.எல்.ஏ-வை திருமணம் செய்வாரா ராகுல் காந்தி?

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 04:29 pm

ராகுல் காந்தி உடன் திருமணம் என்ற வதந்தி வருத்தமளிப்பதாக ரேபரேலி தொகுதி எம்.எல்.ஏ அதிதி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் வேலைகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பரபரப்பாக இருக்கிறார். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரெலி தொகுதி எம்.எல்.ஏ அதிதி சிங்குடன் ராகுல் காந்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அதிதி சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதுபோன்ற வதந்திகள் எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. ராகுல் காந்தி எனது அண்ணன் மாதிரி. அவருக்கு நான் ராக்கி கட்டியிருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். 

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வதந்தியை பரப்பியவர்களை எச்சரிக்கிறேன். இது போன்ற செயல்களில் அவர்கள் ஏன் ஈடுபட்டுள்ளார்கள் என்பது எனக்கு தெரியும். கர்நாடக தேர்தல் பணிகளில் இருக்கும் தொண்டர்களை திசைத்திருப்பவே இதுபோன்று செய்கினறனர் என்று அவர் கூறினார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகிலேஷ் சிங்கின் மகளான அதிதி சிங், அமெரிக்கவில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் படித்தவர். தந்தைக்கு பின் 2017ல் தேர்தலில் போட்டியிட்ட அதிதி, தன்னை எதிர்த்து நின்றவரை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 29 வயதாகும் அதிதி சிங், பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close