கோடை வெயில்: பிள்ளையாருக்கே 'ஏ.சி' வைத்த உ.பி பக்தர்கள்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 03:54 pm


வட இந்தியாவில் தற்போது வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது. வெயிலில் தாக்கத்தினால் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களில் விநாயகர், சிவன் உள்ளிட்ட கடவுள்களுக்கு ஏ.சி மற்றும் ஏர் கூலர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பெரும்பாலான மக்கள் தற்போது ஏ.சி-யை உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில் வெப்பம் அதிகரித்துள்ளதன் காரணமாக கடவுளுக்கே ஏசி பொருத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாமி சன்னதியில் கர்ப்ப கிரகம் உள்ளேயே ஏ.சி மற்றும் ஏர் கூலர் பொருத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து கோவில் ஒன்றின் அர்ச்சகர்கள் கூறுகையில், "கடவுளும் நம்மைப் போலத் தானே. அதிக வெயில் அவருக்கும் அசௌகரியத்தை கொடுக்கும் அல்லவா... கடவுளை குளிர்விக்க ஏ.சி பொருத்த வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதனால், கோவில் கர்ப்பகிரகத்தில் ஏ.சி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்வுறும் கடவுள் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பார்" என விளக்கமளித்துள்ளார்.

கடவுளுக்கே ஏசியா? என நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close