கத்துவா வழக்கு பதன்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 04:15 pm


கத்துவா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிஃபா கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இதையடுத்து தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதால் வழக்கினை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றக்கோரி சிறுமியின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். 

அந்த மனு மீதான இன்றைய விசாரணையில், வழக்கினை பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் அரசு தங்களது சார்பில் வாதாட ஒரு அரசு வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளலாம். சிறுமியின் பெற்றோர், சிறுமிக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர், சாட்சியாளர்கள் ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பஞ்சாப் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தினசரி நடைபெற வேண்டும். மாநில அரசின் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கேற்ப பஞ்சாப் நீதிமன்றம் செயல்பட வேண்டும். மேலும் வழக்கு விசாரணை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கை பஞ்சாப் நீதிமன்றத்திற்கு மாற்ற காஷ்மீர் அரசு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close