கர்நாடக தேர்தல்: 391 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 07:59 pm


கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 391 வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளது என ADR அமைப்பு  வெளியிட்ட  ஆய்வறிக்கையில் பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 224 தொகுதிகளில் 2,655 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தபோது அதில் 883 பேர் கோடிஸ்வரர்கள் என்றும், இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 7.54 கோடி என்றும் வெளியானது. கோடீஸ்வர வேட்பாளர்களில் அதிகபட்சமாக 208 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியினர் 207 பேர், மற்றும்  மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 154 பேர் ஆவர். 

மேலும் 391 வேட்பாளர்கள் மீது பல்வேறு விதமான குற்றவியல் வழக்குகள் உள்ளன. 254 வேட்பாளர்கள் மீது மிக தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 4 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கு, 25 பேர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 23 வேட்பாளர்கள் மேல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள 224 பா.ஜ.க வேட்பாளர்களில் 83 பேர் மீதும், 220 காங்கிரஸ் வேட்பாளர்களில் 59 பேர் மீதும் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. ஜனதா தள கட்சியை சேர்ந்த 199 பேரில் 41 பேர் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close