நக்சலைட்களின் லேட்டஸ்ட் ஆயுதம்... 'கக்கா பாம்'

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 10:36 am


நக்சலைட்டுகள் தற்போது அதிநவீன 'ரேம்போ ஆரோஸ்' (Rambo Arrows), ராக்கெட் குண்டுகளுடன், விலங்கு கழிவுகளை வைத்து பிரத்தியேகமாக செய்யப்பட்ட கக்கா பாம்களை பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பாதுகாப்புப் படையும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமீபகாலமாக நக்சலைட்டுகள் அதிநவீன கருவிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இவர்கள்  'ரேம்போ ஆரோஸ்' எனப்படும் வெடிபொருள் நிரப்பிய அம்புகளையும், கழிவுகளுடனான ராக்கெட் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். 


துப்பாக்கி முனையில் குண்டு பொருத்திய ஒரு அம்பை சொருகி சுடும் போது அதில் இருந்து புகை வெளியேறி எதிரியை நிலைகுலையச் செய்கிறது. இதனுடன், நாய் உள்ளிட்ட விலங்குகளின் கழிவை வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், பாதுகாப்புப் படையினர் ஒரு நிமிடம் திகைத்துப் போய் நிற்கின்றனர். இதை பயன்படுத்தி நக்சலைட்கள் தாக்குதல் நடத்தி, பாதுகாப்பு படை வீரர்களை வீழ்த்துகின்றனர். மற்றபடி இந்த கழிவு குண்டுகளால், வேறு எந்த பாதிப்பும் இல்லை. 

இந்த குண்டுகள் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றினுள் வீரியம் குறைந்த வெடிபொருள் நிரப்பப்பட்டு துப்பாக்கி முனையில் உள்ள கம்பியில் பொருத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது சம்பவ இடத்தில் இந்த மாதிரியான ரேம்போ ஆரோஸ் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close