பிரமோஸ் ஏவுகணையில் புதிய சாதனையை எட்டவிருக்கும் இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 09:11 pm


பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் 76% வரை உள்நாட்டுப் பொருட்கள் இன்னும் 6 மாதத்தில் உபயோகிக்கப்படும் என பிரமோஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் முயற்சியினால் உருவாக்கப்பட்ட உலகிலேயே அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணை பிரமோஸ். இந்தியாவில் கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்று படைகளிலும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது.  ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக பயணித்து 290 கி.மீ. தூரம் வரை சென்று குறிக்கோளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 

இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணைகளில் தொடக்கத்தில் 10-12% வரையிலான உள்நாட்டுப் பொருட்களே உபயோகப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்திய பாதுகாப்புத் துறை, எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து 65% வரை உள்நாட்டுப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரமோஸ் ஏவுகணை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. தற்போதும் பிரமோஸ்-இல் 65% உள்நாட்டுப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இன்னும் இன்னும் 6 மாதங்களில் இந்த ஏவுகணை தயாரிப்பில் சுமார் 76% வரை உள்நாட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


மேலும், "குவாட் லாஞ்சர் எனும் நவீன தொழில்நுட்பத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதனால், 8 சூப்பர்சானிக் ஏவுகணைகள் அதாவது வலதுபுறம் நான்கு இடதுபுறம் நான்கு, என கப்பலில் இருந்து ஏவ முடியும்" என்றார் பிரமோஸ் இயக்குனர் சுதிர் மிஷ்ரா.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close