சுற்றுலா சென்ற தமிழர் காஷ்மீர் கலவரத்தில் பலி!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 03:39 am


ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த திருமணி என்பவர், அங்கு நடந்த கலவரத்தில் கற்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.

சென்னையை சேர்ந்த திருமணி என்பவர், தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தார். தலைநகர் ஸ்ரீநகரில் இருந்த அவர்கள், நேற்று நடந்த கலவரத்தில் சிக்கினார்கள். கடந்த சில வருடங்களாக, பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே காஷ்மீரில் கலவரம் நடப்பது அதிகரித்து விட்டது. தீவிரவாதிகளை சுற்றி வழைத்து தாக்குதல் நடத்தும் பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் இளைஞர்கள் பலர் கல் வீசி தாக்குதல் நடத்துகின்றனர். 

அதுபோல, கடந்த சில தினங்களில் தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவத்தினர் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனிடையே சுற்றுலா சென்றிருந்த தமிழர்கள் சிக்கினார்கள். அதில் திருமணியும், அவருடன் சென்ற மற்றவர்களும் காயமடைந்தார்கள். படுகாயம் அடைந்த திருமணி மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி திருமணி உயிரிழந்தார். மற்றவர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close