ரயிலில் வாங்கும் உணவுக்கு இனி ரசீது!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 11:05 am


ரயிலில் வாங்கும் உணவுகளுக்கு இனி ரசீது வழங்க ரயில்வே மண்டலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிகள் வாங்கும் உணவுக்கு ரசீது வழங்குவதற்காக ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 10 P.O.S. எனப்படும் ரசீது இயந்திரங்களை வைத்திருக்குமாறு ரயில்வே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன்மூலம், ஒப்பந்ததாரர்கள் உணவை கூடுதல் விலைக்கு பயணிகளிடம் விற்பனை செய்வதைத் தடுக்க முடியும் என்று ரயில்வே கருதுகிறது. ரயிலில் உணவுகளை கூடுதல் விலைக்கு விற்பதாக பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வரும் நிலையில், உணவுக்கு ரசீது வழங்க ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதமே நாம் வெகுதூரம் ரயிலில் பயணிக்கும் போது ரயில்களில் வழங்கப்படும் உணவுக்கு விற்பனையாளர்கள் ரசீது தரவில்லை என்றால் உணவு கட்டணம் செலுத்த தேவையில்லை என இந்தியன் ரயில்வே தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close