வன்புணர்வுக்கு ஆண்களின் வளர்ப்பே காரணம்: நிர்மலா சீதாராமன் பேச்சு

Last Modified : 08 May, 2018 08:23 pm

வன்புணர்வு சம்பவங்களுக்கு ஆண் பிள்ளைகளை வீட்டில் வளர்க்கும் முறையே காரணம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

டெல்லியில் இன்று நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "வன்புணர்வு சம்பவங்களுக்குப் பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் எனக்கூறுவது முட்டாள்தனமானது. அதை ஏற்க முடியாதது. 

பெண்களின் உடை தான் காரணம் என்றால், வயது முதிர்ந்த பெண்களும் கைக்குழந்தைகளும் வன்புணர்வுக்கு உள்ளாவது ஏன்?  பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்களில் 10ல் ஏழு பேர், நண்பர்கள், உறவினர்களாலேயே பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. 

தெரிந்தவர்களால் பெண்கள் வன்புணர்வு செய்யப்படும் போது, அதில் நடவடிக்கை எடுப்பது சற்று கடினம் தான்.  பெண்கள் பாதுகாப்பிற்கு போலீசார் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

இந்த கருத்தை முன்னெடுத்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், பிரச்னை பெரும்பாலும் ஆண்களின் வளர்ப்பினால், அவர்கள் வளர்த்தெடுக்கப்படும் கண்ணோட்டத்தினால் வருகிறது. எனவே மாற்றம் குடும்ப சூழலில் ஏற்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close