நரேந்திர மோடிக்கு வாக்களிக்க சொன்ன சித்தராமையா! தொண்டர்கள் அதிர்ச்சி

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 07:49 pm


கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளர் நரேந்திர சுவாமிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் வருகிற 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க - காங்கிரஸ் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர சுவாமியை ஆதரித்து முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "கர்நாடகாவில் சாலை, குடிநீர் வசதி என ஏழைகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நாங்களும், நரேந்திர மோடியும் தான். எனவே அவருக்கே தாங்கள் ஓட்டுப்போட வேண்டும்" என கூறியது அங்கிருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே அவருடன் இருந்த நரேந்திர சுவாமி சூசகமாக அவருடைய தவறை சுட்டிக்காட்ட, சுதாரித்துக்கொண்ட சித்தராமையா, உடனே "மன்னித்துவிடுங்கள் இந்த பணிகளுக்கு காரணம் நரேந்திர சுவாமி காரணம். சாமி இங்குள்ளார். மோடி குஜராத்தில் உள்ளார். நரேந்திர மோடி என்பது கற்பனை. நரேந்திர சுவாமி என்பது உண்மை” என்று ஒரு வழியாக சமாளித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close