பெங்களூருவில் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 08:29 am

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

பெங்களூரு வடக்கு பகுதியில் ராஜா ராஜேஸ்வரி நகர் தொகுதியில் மஞ்சுளா நஞ்சாமூரி என்பருக்கும் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அங்கிருந்து கட்டுக்கட்டாக 9 ஆயிரத்து 476 வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனுடன் 5 மடிகணினிகளும், பிரிண்டர் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார், அந்த வாக்காளர் அட்டைகள் அனைத்தும் அசலானவை. 10-15 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்டவை எனவும் அதில் போலிகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வு நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி சரியான நேரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 20 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அது தொடர்பான புகைப்படங்களையும் பாஜகவினர் வெளியிட்டிருந்தனர். தேர்தலில் தோற்பது உறுதியானதால் காங்கிரஸ் கட்சியினர் சதி வேலையில் ஈடுபடுவதாக பாஜகவின் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இங்கு ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்காரர்களுக்கு தொடர்பு உள்ளதற்கு மேலும் ஆதாரங்கள் உள்ளன என்றும் ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக பைகளும் சிக்கியுள்ளன என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

வாக்காளர் அட்டைகள் கிடைத்த வீட்டின் உரிமையாளரான மஞ்சுளா நஞ்சாமூரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பே விலகிவிட்டதாகவும், தற்போது காங்கிரசில் இருப்பதாகவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். அதனை மறுத்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, மஞ்சுளா நஞ்சாமூரி பாரதிய ஜனதாவை சேர்ந்தவர் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், உண்மையை உணர்வதே தேர்தல் ஆணையத்தின் கடமை. இது பாஜகவின் சதி. இதை செய்தது வடிவமைத்தது  திட்டமிட்டது அனைத்தும் பாஜக தான் என்றார்.

மூன்று நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்டுக்கட்டாக வாக்காளர் அட்டை சிக்கியது கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close