கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூரின் பெற்றோர் விபத்தில் சிக்கினர்

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 09:53 am

கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூரின் பெற்றோர் மும்பை அருகே மோட்டார் பைக்கில் சென்று கொண்டு இருந்த போது விபத்தில் சிக்கினர். 

இந்திய கிரிக்கேட் வீரர் ஷர்துல் தாகூர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது பெற்றோர் நரேந்திர தாகூர் மற்றும் ஹஸ்னா தாகூர் மும்பையில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் மோட்டார் பைக்கில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது மும்பை பால்கர் பகுதியில் பைக் தடுமாறி  இருவரம் கீழே விழுந்துள்ளனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவர்களை அப்பகுதியல் உள்ள தாவ்லே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close