என்ன ஒரு அடாவடித்தனம்: ராகுலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 03:21 pm

2019ம் ஆண்டு பிரதமராவேன் என்று ராகுல் காந்தி கூறியதற்கு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

கர்நாடக தேர்தல் நெருங்குவதையொட்டி இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பங்கராபேட் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அதில், ''நேற்று ஒருவர் முக்கியமான விஷயத்தைப்பற்றி பேசியுள்ளார். தான் பிரதமராக போவதாக அவர் கூறியுள்ளார். அவர் பல அனுபவம் வாய்ந்தவர்களின் வழியில் குறுக்கிடுகிறார். எப்படி ஒருவரால் தன்னை தானே பிரதமர் என்று சொல்லிக்கொள்ள முடியும். இது அடாவடித்தனம்'' என்று ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி விமர்சித்தார். 

மேலும், ''ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஒரு இடத்தில் மட்டும் தான் அனைத்து அதிகாரமும் இருந்தன. ஆனால் பா.ஜ.கவின் ஆட்சியில் 125 கோடி மக்களிடமும் அதிகாரம் உள்ளது. காங்கிரஸ் கட்சி, கலாச்சாரத்தை அழிப்பது, பிரிவினை, சாதி, குற்றம், ஊழல், ஒப்பந்ததாரர் முறை ஆகிய  நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் செல்லும் இடமெல்லாம் ஊழலை பரப்பிக்கொண்டே செல்கின்றனர். இது கர்நாடகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. 

நான் பெரியளவில் நிதி ஒதுக்கி கழிவறைகள் கட்டும் திட்டத்தை கொண்டு வருகிறேன் என்றால், அதை யாருக்காக செய்கிறேன்.. பணக்காரர்களுக்கா? இல்லை அந்த வசதிகள் கிடைக்காமல் இருக்கும் ஏழை மக்களுக்கு. இது காங்கிரஸ் கட்சியினருக்கு புரியாது" என்று பேசினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close