மோடியின் விமான பயண விபரத்தை வெளியிடுக- மத்திய தகவல் ஆணையம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 09 May, 2018 11:24 pm


பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்கள், அதற்கு செலவு செய்யப்பட்ட தொகை ஆகிய கணக்குகளை தாக்கல் செய்யுமாறு மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பிரதமராக பொறுபேற்ற நரேந்திர மோடி சுற்றுப்பயணமாக வெளி நாடுகளுக்கு அடிக்கடி செல்வதுண்டு. நாட்டின் பிரச்னைகளுக்கு மத்தியில் பிரதமரின் இந்த பயணங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகும்.

இந்நிலையில் கடந்த 2016 முதல் 2017 வரை நரேந்திர மோடியின் விமான பயண விவரங்கள், அவர் சென்ற வெளிநாடுகள், தங்கியிருந்த நாட்கள், பயணித்த இடங்கள், பயணம் செய்ததற்கு ஆன செலவு உள்ளிட்ட தகவல்களை ஏர் இந்தியா நிறுவனம் உரிய ஆவணங்களுடன் வெளியிட வேண்டும் என லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார். பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் மட்டுமே மேற்கண்ட தகவல்களை வெளியிட வேண்டும். எனவே தற்போது அந்த விவரங்களை வெளியிட முடியாது என தெரிவித்திருந்தது.


இதையடுத்து மத்திய தகவல் ஆணையம் மத்திய தகவல் ஆணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு முறையீடு செய்தார். மனுவை விசாரித்த ஆணையம், அரசு கருவூலத்தின் பணத்தில் தான் பிரதமர் வெளிநாடு செல்வது போன்ற செலவுகள் செய்யப்பட்டிருக்கும். இதனால் அந்த செலவு குறித்த விவரங்களை மறைத்தல் கூடாது. அதனை வெளியிடவேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close