மணிப்பூர் வெடிகுண்டு தாக்குதல்; 2 எல்லை பாதுகாப்பு படையினர் பலி

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 06:34 pm


மணிப்பூர் மாநிலத்தில், இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில், எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர், ஒரு பெண் காயமடைந்தார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து டிமாபுர் செல்லும் வழியில், கொய்ரெங்கி பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. ராணுவ தளத்திற்கு வெளியே உள்ள ஒரு கடையில் குண்டு வீசப்பட்டது. இதில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு எல்லை பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். கடையின் உரிமையாளரான ஒரு பெண்ணும் இதில் காயமடைந்தார்.

குற்றவாளிகள் பயன்படுத்தியது, வீட்டிலேயே செய்யப்பட்ட வெடுகுண்டு என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close