ராகுல் காந்திக்கு இவ்வளவு ஆணவம் கூடாது: மோடி

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 04:31 am


கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அம்மாநிலத்தில் இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சி கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது ஆட்சியை நீட்டிக்க  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கையில் இருக்கும் கடைசி பெரிய மாநிலமான கர்நாடகத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

2019ல் தான் பிரதமராக தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், "அதெப்படி கட்சியில் அவ்வளவு மூத்த தலைவர்கள் இருக்கும் போது, ஒருவர் எல்லாரையும் பின் தள்ளிவிட்டு முன்னே வந்து நிற்க முடியும். இது மிகவும் ஆணவமான பேச்சு" என மோடி நேற்று விமர்சித்தார்.

மேலும், "கர்நாடக மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டில் எங்கெல்லாம் தேர்தல் நடந்ததோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி தோற்று போனது" என்றும் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவரது 'ரிமோட் கன்ட்ரோல்' காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இருந்ததாகவும், தனது ஆட்சியில் மக்கள் கையில் ரிமோட் கன்ட்ரோல் இருப்பதாகவும் மோடி கூறினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close