• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

உ.பி.யில் கனமழைக்கு 9 பேர் பலி!

  Sujatha   | Last Modified : 10 May, 2018 07:59 am


உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு இது வரை 9பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பல மாவட்டங்களில் மின்சாரமும்  துண்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த கன மழைக்கு 9 பேர் பலியாகினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "உ.பி.யின் பல்வேறு நகரங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதுராவில் இடி தாக்கியதில் 3 பேரும், ஆக்ராவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும், இடாவா நகரில் 4 பேர் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர்" என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


Advertisement:
[X] Close