பணமதிப்பிழப்பு தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டது: ஐ.எம்.எஃப்

  Padmapriya   | Last Modified : 10 May, 2018 11:22 am

ஜிஎஸ்டி விதிப்பு, பணமதிப்பிழப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் தாக்கத்திலிருந்து மீண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச நிதி ஆணையம் ( IMF) குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நிதி ஆணையமான ஐ.எம்.எப். 2018-ம் ஆண்டிற்கான ஆசியா - பசிபிக் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. 

இதையடுத்து இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 2018-19-ம் நிதியாண்டில் 7.8 சதவீதமாக உயரும். இந்தியாவிற்கு அடுத்தபடியாக வங்கதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

அதே போல, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளும் ஆசிய - பசிபிக் நாடுகளின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டுக்கு உந்துதலாக அமையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close