அம்பேத்கரை காங்கிரஸ் மதித்ததே இல்லை: மோடி தாக்கு

Last Modified : 10 May, 2018 02:44 pm

அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றதான் பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும், காங்கிரஸ்  அம்பேத்கரை என்றுமே மதித்தது இல்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓயவுள்ள நிலையில், நமோ ஆப் மூலம் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், "பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களை சந்தித்து, அரசின் கொள்கைகள் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும்.

அவர்களுக்காக பா.ஜ.க அரசின் உழைப்பு குறித்து விளக்க வேண்டும். ஆட்சியில் இருந்த வரை காங்கிரஸ் அம்பேத்கரை மதித்தது கிடையாது. அவருக்கு பாரத ரத்னா விருது கூட வழங்கப்படவில்லை. 

பா.ஜ.க அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான சட்டத்தை இன்னும் வலிமையாக்கியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாய கமிஷனுக்கு அரசியல் சாசன அந்தஸ்து கொடுப்பதை தடுக்கவே, காங்கிரஸ் நாடாளுமன்றத்தை முடக்கியது.

வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த நாடு என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற பாஜக கடுமையாக உழைக்கிறது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் அதிகளவில் உள்ள கட்சி பா.ஜ.க தான். அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பா.ஜ.க-வுடன் தான் உள்ளனர்" என்று அவர் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close