காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: 3 லஷ்கர் தீவிரவாதிகள் பலி

  Newstm Desk   | Last Modified : 05 May, 2018 04:34 pm


ஜம்மு காஷ்மீரின் சத்தபால் பகுதியில் இன்று ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.

சத்தபால் பகுதியில் உள்ள மொஹாலா என்ற இடத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் பதுங்கி இருந்து சுடத் துவங்கினர். போலீசார், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். கலவரத்தில் வாகனம் மோதி அவர் இறந்தார். துணை ராணுவப்படை வாகனம் ஒன்று அவர் மீது மோதியதாக அந்த பகுதி மக்கள் கூறினர். ஆனால்,  அங்கு துணை ராணுவப்படைக்கு சொந்தமான எந்த வாகனமும் இல்லையென ராணுவம் தெரிவித்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மூவரும் லஷ்கர்-ஈ- தைய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close