காஷ்மீர் எல்லையில் தாக்குதல்; 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 03:53 pm


காஷ்மீர் எல்லையில் இன்று இந்திய ராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் ஜெய்னாபோரா,பாதிகாம் ஆகிய பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து  பாதுகாப்புப்படையினர் தீவிரவாதிகளை நோக்கி நடத்திய தாக்குதலில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில், காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் முகமது ரபி பட் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த கமாண்டர் சதாம் படார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இன்றைய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close