நீட் கட் ஆஃப்: 130 முதல் 135 வரை இருக்க வாய்ப்பு

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 12:10 pm


நீட் தேர்வு சற்று எளிமையாக இருந்ததால் தகுதி மதிப்பெண் கடந்தாண்டை விட சற்று அதிகரிக்கலாம் என கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.

கடந்தாண்டு 131 தகுதி மதிப்பெண்ணாக இருந்தது. இந்த ஆண்டு தகுதி பெறுவதற்கான கட் ஆஃப் மதிப்பெண், 130 முதல் 135 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அகில இந்தியப் பிரிவிற்கான நீட் மதிப்பெண் 610 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் மதிப்பெண்ணும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும் ஜூன் 5ம் தேதி முடிவுகள் வெளியான பிறகே உறுதியான மதிப்பெண் நிலைகளை அறிய முடியும்.

முன்னதாக நீட் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள், மாநில கல்வி பாடங்களில் இருந்து பெரிதாக கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கூறினர். மேலும் உயிரியல் பாடம் கடந்த ஆண்டை விட சுலபமாக இருந்ததாகவும், இயற்பியல் பாடம் கடினமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இவ்வளவு கெடுப்பிடிப்புகளுக்கு மத்தியில் தேர்வை முடித்த மாணவர்களின் நிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே தெரியவரும். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close