மாணவர்கள் கேட்டதால்தான் ராஜஸ்தான்: நீட் குறித்து மத்திய அரசு விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 10:58 am

நீட் மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கு நாடு முழுவதும் நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தமிழக மாணவர்களுக்கு கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சிக்கிம் என தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

இதனால் 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

அதில், தமிழகத்தில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 31% அதிகம் ஆகும். நடப்பாண்டில் தமிழகத்தில் 170 தேர்வு மையங்களை சி.பி.எஸ்.இ ஏற்படுத்தியது. அதில் 1,07,288 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 25,206 இடங்கள் அதிகமாகும்.

தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், தேர்வு மைய பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த எந்த மாணவருக்கும், அவர்களைக் கேட்காமல் ராஜஸ்தான், கர்நாடகா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்படவில்லை. இதைப்போல தமிழில் தேர்வெழுத தேர்வு செய்த 24,720 மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன எனக் கூறப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close