பிரதமர் முகத்தை முதுகில் பச்சைக்குத்தி கொண்ட வாலிபர்

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 12:24 pm

கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முதுகில் பிரதமர் மோடியின் முகத்தை பச்சைக்குத்தி உள்ளார். 

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் என்னும் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது முதுகில் பிரதமர் மோடியின் முகத்தை பச்சைக்குத்திக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பச்சைக்குத்திக் கொண்ட பஸ்வராஜ் கூறும் போது, "கடந்த 4 ஆண்டுகளில் பிரதமரின் சிறப்பான ஆட்சியை பாராட்டி தான் அவரது முகத்தை பச்சைக்குத்தி கொண்டேன். இதனை முழுமையாக முடிக்க 15 மணி நேரம் ஆனது.  அவர் இங்கு பிரச்சாரத்தில் இருந்த போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், நான் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற சிறப்பான கட்சி பணிகளை செய்ய வேண்டும் என்றார். அந்த நாளை நான் மறக்கவே மாட்டேன் என்று கூறினார். 

இந்த வாலிபர் கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏ சிவானகவுடாவின் முகத்தையும் தனது உடம்பில் பச்சைக்குத்தி கொண்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close