கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சிதான்: கருத்துக்கணிப்பில் தகவல்

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 01:11 pm

கர்நாடகாவில் பா.ஜ.க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அங்கு விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தல் அம்மாநிலத்தின் ஆளும் கட்சிக்கும், பா.ஜ.கவிற்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று முடிவுகள் வந்துள்ளது. 

கர்நாடகாவில் 1.2 லட்சம் பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மொத்தம் 224 தொகுதிகள் உள்ள கர்நாடகாவில் பா.ஜ.கட்சி மிக எளிதாக 102-108 இடங்களில் வெற்றி அடையும். தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் 72-74 இடங்களை பிடிக்கும். ஜனதா தளம் 42-44 இடங்களையும் மற்ற கட்சிகள் 2-4 இடங்களை பிடிக்கும். 

எனவே 40 சதவீத ஓட்டுகளை பெற்று பா.ஜ.க தனி பெரும்பான்மையில் ஆட்சியை பிடிக்கும் என்று முடிவுகள் வந்துள்ளன. இது பா.ஜ.க-வினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close