13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 03:05 pm


இந்தியாவில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு புயல் மற்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதிப்புயல், மழை ஏற்பட்டதில்  மொத்தமாக பொதுமக்கள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் புயல், மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இத்துடன் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை ஏற்படும். காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இடி, மின்னல், மழையுடன் புயல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கையை அடுத்து டெல்லி, ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநில பள்ளிகள் அனைத்திற்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close