ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை வெளுத்துவாங்கிய மாணவி!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 08:06 pm


கல்லூரி நேரத்தில் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை மாணவி வெளுத்துவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள அரசு மகளிர் கல்லூரியல் பேராசிரியரான சாமன் லால், கல்லூரியில் வகுப்பு நேரத்தின்போது, தன்னிடம் படிக்கும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கல்லூரி வளாகத்தில் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த கல்லூரி முதல்வர் பேராசிரியரை அழைத்து கண்டித்துள்ளார். இதையடுத்து பேராசிரியர் மாணவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 


கல்லூரி முடிந்து மாணவிகள் வீட்டிற்கு சென்றவுடன், பேராசிரியர் மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உன் பெற்றோருக்கு நல்ல வேலை வாங்கி தருகிறேன். நாம் இருவரும் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மாணவி, அடுத்த நாள் காலை தன் பெற்றோருடன் கல்லூரிக்கு வந்து, பேராசிரியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை ஒருகட்டத்தில் தீவிரமடைய, கல்லூரி வளாகத்திலே பேராசிரியரை அந்த மாணவி மற்றும் அவரது தாய் தாக்கியுள்ளனர். பேராசிரியரை மாணவி அடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒருமுறை கண்டித்தும் மீண்டும் அத்துமீறிய பேராசிரியரை அக்கல்லூரி முதல்வர் சிரஞ்சீவி கவுர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close