ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் இன்று முதல் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 08:54 am

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று முதல் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.

7வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை தனியார் மையமாக்க கூடாது, தேசிய பென்சன் திட்டம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். முன்னதாக இது தொடர்பாக அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சகங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இன்று ரயில்வே ஊழியர்கள் தங்களது 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளனர். ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், பாதுகாப்பாளர்கள் சங்கம் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் உள்பட 4 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close