காஷ்மீர் எல்லையில் 4 தீவிரவாதிகள் பிடிபட்டனர்!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 11:19 am


ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இன்று 4 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் பிடிபட்டுள்ளனர்.

இந்திய வட எல்லையான காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து தனது பலத்தை காட்டுகிறது. சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை கண்டித்து அவர்களது ஆதரவாளர்கள் சிலர் பொதுமக்கள் இருந்த இடத்தில் நேற்று கல்வீச்சு நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் பலியானார். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டையை இந்திய ராணுவத்தினர் தொடங்கினர். அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் இன்று 4 தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு உதவி செய்த ஆதரவாளர்கள் 7 பேரும் பிடிபட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து கார் மற்றும் கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close