ஹை ஹீல்ஸ் அணிந்ததால் தடுக்கி விழுந்த தாய்: 6 மாத குழந்தை பலி!

Last Modified : 08 May, 2018 06:16 pm

மும்பையில் ஹை ஹீல்ஸ் அணிந்து நடந்த பெண் தடுக்கி விழுந்ததில், அவர் கையிலிருந்து தவறிவிழுந்த 6 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

மும்பையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஃபெமிதா ஷேக் என்ற பெண் தனது கைக் குழந்தையுடன் சென்றார். ஹை ஹீல்ஸ் அணிந்து சென்ற அவர், தடுக்கி திடீரென குழந்தையுடன் கீழே விழுந்தார். அப்போது அவர் முதல் மாடியில் நின்று கொண்டிருந்ததால், குழந்தை தரைத் தளத்தில் விழுந்தது.  

குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாய்க்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 

விசாரணையில் இது எதிர்பாராமல் நடந்து விபத்து என உறுதி செய்யப்பட்டது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close