2 ஆண்டுகளுக்கு பிறகு பிரச்சார களத்தில் சோனியா

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 02:17 pm

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்ற பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், சோனியா காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். காங்கிரஸ் தலைவரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் சோனியா இன்று மாலை பிஜாப்பூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி கலந்துகொள்கிறார். 10ம் தேதி வரை தெற்கு கர்நாடகா பகுதியில் சோனியா பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் பிரதமர் மோடியும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close