2019ல் பிரதமராக தயார்: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 04:55 pm

2019ம் ஆண்டு பிரதமராவதற்கு தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார். 

பெங்களூருவில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் தான் பிரதமராக தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், 2019 தேர்தலில் பா.ஜ.க தோல்வியடையும், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெல்வது கூட சந்தேகம் தான். உத்திரப்பிரதேசத்தில் 5 சீட்டுகளைக்கூட பா.ஜ.க கைப்பற்றாது. சமீபத்தில் நடந்த இடைதேர்தல் தான் அதற்கு சான்று என்றார். 

இதற்கு முன் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் பேசிய போது ராகுல் காந்தி தான் பிரதமராக தயார் என்று தெரிவித்திருந்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close